*“தி பாரடைஸ்” படத்திலிருந்து நேச்சுரல் ஸ்டார் நானியின் ஜடால் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது* – *𝐍𝐚𝐭𝐮𝐫𝐚𝐥 𝐒𝐭𝐚𝐫 𝐍𝐚𝐧𝐢’s 𝐓𝐡𝐞 𝐏𝐚𝐫𝐚𝐝𝐢𝐬𝐞 Movie Tamil and English Press Release*

*𝐍𝐚𝐭𝐮𝐫𝐚𝐥 𝐒𝐭𝐚𝐫 𝐍𝐚𝐧𝐢's 𝐓𝐡𝐞 𝐏𝐚𝐫𝐚𝐝𝐢𝐬𝐞 Movie Tamil and English Press Release* *“தி பாரடைஸ்” படத்திலிருந்து நேச்சுரல் ஸ்டார் நானியின் ஜடால் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது* 'தி பாரடைஸ்' படத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி கதாப்பாத்திரத்தின்  ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து பெரும்  வரவேற்பைப் பெற்று வருகிறது. நானி வித்தியாசமான  தோற்றத்தில், இதுவரை தோன்றாத மாறுபட்ட ஒரு வேடத்தில் நடிக்கிறார். அடர்த்தியான மீசை மற்றும் தாடியுடன், இரண்டு ஜடை முடிகள் தொங்க அவரின் தோற்றம் மிரட்டலாக உள்ளது. இந்தக் கதாபாத்திரத்தின் பெயர் 'ஜடால்' - தனித்துவமான தோற்றம் கொண்ட ஒரு தனித்துவமான பெயராக அமைந்துள்ளது. இந்த தோற்றத்தை அறிமுகப்படுத்தி, தயாரிப்பாளர்கள் 'மாறுபட்ட சிகையலங்காரமாகத் துவங்கி ஒரு புரட்சிகரமான லுக்காக முடிந்துள்ளது' என்று தெரிவித்துள்ளனர். தசரா படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு திறமை மிகு  இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடெலா இயக்கியிருக்கும் #TheParadise, இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். 'ரா ஸ்டேட்மென்ட்' க்ளிம்ப்ஸ் வெளியானதைத் தொடர்ந்து, படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நானியின் ஃபர்ஸ்ட் லுக் மூலம், தயாரிப்பாளர்கள் எதிர்பார்ப்புகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். இயக்குநர் ஸ்ரீகாந்த் தனது தொலைநோக்குப் பார்வை மற்றும் நுணுக்கமான விவரங்களைப் படைப்புகளில் வெளிப்படுத்துவதன் மூலம்   தேசத்தின் பேசு பொருளாக மாறியிருக்கிறார். இந்த போஸ்டர் படத்தின் மீதான  எதிர்பார்ப்பைப் பன்மடங்கு அதிகரித்துள்ளது. தசரா படத்திற்குப் பிறகு அவர்களின் இரண்டாவது கூட்டணியில், இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடெலா, யாருமே நினைத்துப் பார்க்காத வகையில் நானியை அறிமுகப்படுத்தியிருக்கிறார். இந்தக் கதை ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத்தின் உட்புறங்களில் அமைக்கப்பட்டுள்ளது மற்றும் ஒரு தீவிரமான காலகட்ட அதிரடி நாடகமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது. இந்தப் படத்தை SLV சினிமாஸின் கீழ் சுதாகர் செருகுரி பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார். ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கும் இந்தப் படத்தில் ராகவ் ஜுயல் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஒளிப்பதிவை சிஹெச் சாய் கையாள, நவீன் நூலி மற்றும் அவினாஷ் கொல்லா முறையே எடிட்டிங் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பைக் கையாளுகின்றனர். தி பாரடைஸ் திரைப்படம் மார்ச் 26, 2026 அன்று திரைக்கு வர உள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், பெங்காலி, ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் ஆகிய எட்டு மொழிகளில் வெளியாகி, இந்திய சினிமாவின் சிறப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவுள்ளது. இந்தப் படம் உலகம் முழுவதும் வெளியாகி, இந்திய சினிமாவை உலக வரைபடத்தில் இடம்பெறச் செய்யும் என்று படக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். *‘𝐓𝐡𝐞 𝐏𝐚𝐫𝐚𝐝𝐢𝐬𝐞’ 𝐦𝐚𝐤𝐞𝐫𝐬 𝐫𝐞𝐥𝐞𝐚𝐬𝐞 𝐚 𝐬𝐭𝐫𝐢𝐤𝐢𝐧𝐠 𝐟𝐢𝐫𝐬𝐭 𝐥𝐨𝐨𝐤 𝐨𝐟 𝐍𝐚𝐭𝐮𝐫𝐚𝐥 𝐒𝐭𝐚𝐫 𝐍𝐚𝐧𝐢 𝐚𝐬 ‘𝐉𝐀𝐃𝐀𝐋’* The first look of Natural Star Nani from The Paradise released to a unanimous response from fans and audience. The unexpected look for Nani is being talked about all over. Nani, shedding his charming image, has stepped into a role like never before. He is seen in a thick moustache and beard along with two braids that give him his name. The character is called ‘JADAL’ - a unique name with a unique look. With the look, the makers have also given a hint of his character by saying ‘It started as a braid. It ended as a revolution.’. Directed by the talented Srikanth Odela, after the Massive Success of Dasara, #TheParadise is one the most anticipated films from India. Following the launch of the 'Raw Statement' glimpse, any update from the film led to sky-high expectations. With the first look of Nani, the makers have taken the expectations to the next level. Director Srikanth has been the talk of the nation for his vision and detailing. The hype for the film has been growing multifold just with the poster content. In their second collaboration after Dasara, director Srikanth Odela presented Nani like no one has ever imagined. The story is set in the interiors of Hyderabad and Secunderabad and promises to be an intense period action drama. The film is produced on a lavish scale by Sudhakar Cherukuri under SLV Cinemas. Raghav Juyal plays one of the key roles in the film that has music by the sensational Anirudh Ravichander. The cinematography is handled by Ch Sai while Naveen Nooli and Avinash Kolla take care of the editing and production design, respectively. The Paradise is slated to hit screens on March 26, 2026. The film will be released in eight languages - Telugu, Hindi, Tamil, Kannada, Malayalam, Bengali, English, & and Spanish - setting a new standard and raising the bar for cinematic excellence. With its universal appeal, the film will have a pan-world release and put Indian cinema on the global map.

Comments (0)
Add Comment