பிரம்மாண்டமாக உருவாகும் நாகபந்தம் கிளைமேக்ஸ் !

 

அபிஷேக் நாமா இயக்கும் பான்-இந்தியா மிதாலஜிக்கல் ஆக்சன் படமாக உருவாகும் ‘நாகபந்தம்’  படத்தின் அதிரடி கிளைமேக்ஸ் காட்சி தற்போது ராமாநாயுடு ஸ்டூடியோவில்  படப்பிடிப்பு நடந்து வருகிறது. மிதாலஜிக்கல் படங்களில் இதுவரையிலான  முயற்சிகளில் மிகப் பெரும் அளவில், மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் கிளைமேக்ஸ் காட்சிகளில் ஒன்றை இந்தக் குழு உருவாக்கி வருகிறது.

இளம் நடிகர் விராட் கர்ணா நடிக்கும் இந்தப் படத்தை கிஷோர் அன்னபுரெட்டி,  மற்றும் நிஷிதா நாகிரெட்டி தயாரித்து வருகின்றனர். குறிப்பாக, கிளைமேக்ஸ் காட்சிக்காக மட்டும் 20 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது பான்-இந்தியா ரிலீசுக்காக உருவாக்கப்பட்ட மிகப்பெரும் பொருட்செலவிலான ஆக்சன் பிளாக்குகளில் ஒன்றாக அமைந்துள்ளது.

அபிஷேக் நாமாவின் கனவுப் படைப்பாகிய ‘நாகபந்தம்’ படத்துக்கு அவர் எழுதிய சக்திவாய்ந்த திரைக்கதை பெரும் வரவேற்பு பெறும் என்பதில் நம்பிக்கை கொண்டிருப்பதுடன், கிளைமேக்ஸ் படப்பிடிப்பில் அதிக கவனத்துடன் செயல்பட்டு வருகிறார். இந்த மாபெரும் கிளைமேக்ஸ் காட்சியின் மையப் பகுதியாக, புராதன கோவில் கலை வடிவத்தை, பிரதிபலிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்ட மகத்தான புனித வாசல் அமைப்பு இடம் பெற்றுள்ளது. இதை ஆர்ட் டைரக்டர் அசோக் குமார் மிகப் பிரம்மாண்டமாக வடிவமைத்திருக்கிறார்.

மேலும், ஆக்சன் காட்சிகளின் தரத்தையும் வலிமையையும் உயர்த்துவதற்காக தாய்லாந்தின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் கெச்சா காம்பக்டீ இந்த படத்தில் இணைந்திருக்கிறார்.

நேற்று படப்பிடிப்பு தளத்தைப் பார்வையிட்ட ஊடகப்பிரமுகர்கள், அங்கு காணப்பட்ட செட் அமைப்பு மற்றும் படமாகி கொண்டிருந்த கிளைமேக்ஸ் காட்சியின் பிரம்மாண்டத்தைக் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கினர்.

“நாகபந்தம்” படத்தில் நாபா நடேஷ் மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர், மேலும் ஜெகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா மற்றும் பி.எஸ். அவினாஷ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு சௌந்தர் ராஜன் எஸ் ஒளிப்பதிவு செய்கிறார், அபே இசையமைக்கிறார். கல்யாண் சக்ரவர்த்தி வசனம் எழுதியுள்ளார், சந்தோஷ் காமிரெட்டி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். அசோக் குமார் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.

“நாகபந்தம்” 2025 ஆம் ஆண்டில் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில், பான் இந்திய திரைப்படமாக வெளியாகவுள்ளது.

இப்படத்தின் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புரமோஷன் பணிகள் விரைவில் துவங்க உள்ளன.

நடிப்பு:
விராட் கர்ணா, நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், ஜகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா, B.S.அவிநாஷ் மற்றும் பலர்

தொழில்நுட்பக் குழு:
கதை, திரைக்கதை, இயக்கம் – அபிஷேக் நாமா
தயாரிப்பாளர்கள் – கிஷோர் அன்னபுரெட்டி, நிஷிதா நாகிரெட்டி
ஒளிப்பதிவு – சௌந்தர்ராஜன் S
இசை – அபே, ஜுனைத் குமார்
ஆர்ட் டைரக்டர் – அசோக் குமார்
எடிட்டிங் – R.C. பிரணவ்
CEO – வாசு பொடினி

 

Comments (0)
Add Comment