‘நயன்தாராவை முதன் முதலாக சந்தித்த இடம் இந்த ஹோட்டலில்தான்’- விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி!

சென்னை.

நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவன், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா ஆகிய இருவரின் திருமணம் ஜூன் 9-ந் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை ஓடிடி தளம் ஒன்று ஒளிபரப்பு செய்ய இருப்பதால் திருமணத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ரசிகர்கள், பத்திரிக்கையாளர்கள் என யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. திருமணத்திற்கு வந்திருந்த பிரபலங்கள் அனைவரும் டிஜிட்டல் அழைப்பிதழ் மூலம் தங்கள் மொபைல் போனில் வைத்திருக்கும் கியூஆர் கோடை ஸ்கேன் செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இவர்களது திருமணத்திற்கு கியூஆர் கோட் உள்ள டிஜிட்டல் அழைப்பிதழை   பத்திரிக்கையாளர்களுக்கு கொடுக்க முடியாத காரணத்தால் யாரையும் அழைக்கவில்லை. அதனால்  இன்று சென்னை அண்ணாசாலையில் உள்ள தாஜ் க்ளப் ஹவுஸ் ஹோட்டலில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள்  சந்திப்பில், நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கலந்து கொண்டனர். அப்போது விக்னேஷ் சிவன் கூறுகையில், ‘நானும் ரவுடி தான்’ படத்தின் கதையை சொல்வதற்காக நயன்தாராவை நான் முதன் முதலாக இந்த ஹோட்டல்ல தான் சந்தித்தேன். அதன் நினைவாகத்தான் இந்த  ஹோட்டலில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து வாழ்த்து பெற வேண்டும் என்று நானும்,  நயன்தாரா முடிவு செய்து, அனைத்து பத்திரிக்கையாளர்களையும் சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறோம்.. என்று நெகிழ்ச்சியாக கூறினார்.

Actress Nayandhara-Vigneshsivan NewsFeatured
Comments (0)
Add Comment