சென்னையின் கலாசார மேடையாக நடைபெறுகிறது PROVOKE ART FESTIVAL 2025

8

 

சென்னையில் நவம்பர் 1மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள தி மியூசிக் அகாடமியில் PROVOKE LIFESTYLE வழங்கும் PROVOKE ART FESTIVAL – 2025 மூன்றாவது ஆண்டாக நடைபெறவுள்ளது. இந்த சீசனில் சென்னை தனது கலாசார இதயத்துடிப்பை மேலும் உற்சாகமாக்கவுள்ளது.

 

PROVOKE ART FESTIVAL 2023-ல் துவங்கியதில் இருந்து, பாரதநாட்டியத்தின் உணர்வுமிக்க ஆழத்தையும், கர்நாடக இசையின் காலத்தை வெல்லும் சுவையையும், இந்தியக் கலைகளின் நீங்காத மரபையும் கொண்டாடி வருகிறது. இது இந்தியாவின் வளமான கலை செழுமைக்கு செலுத்தும் மரியாதையாக சமர்ப்பிக்கப்படுகிறது. அதே நேரத்தில் புதுமையான அணுகுமுறைகளையும் அங்கீகரிக்கிறது.

 

இரு நாட்களாக நடைபெறும் இந்த விழாவில் பிரபல கலைஞர்களின் மெய்மறக்கும் நிகழ்ச்சிகள் இடம் பெறவுள்ளன:

 

முதல் நாள் (நவம்பர் 1)

ருக்மிணி விஜய்குமார்

சுபஸ்ரீ தனிகாசலம்

ஹரிச்சரன், சாய் விக்னேஷ், திஷா பிரகாஷ் மற்றும் பலர்.

 

இரண்டாம் நாள் (நவம்பர் 2)

 

ரோஹினி மற்றும் பிரலயன் மற்றும் பிறர்

ராஜேஷ் வைத்யா,

ரஹுல் வெல்லால், ஸ்பூர்த்தி ராவ்.

இந்த விழா, கலை மற்றும் உணர்வுகளின் சங்கமமாக கலைஞர்கள், கலை ரசிகர்கள் மற்றும் கலாசார வல்லுநர்களை ஒன்றிணைக்கும் ஒரு ஆழமான அனுபவமாக அமையவுள்ளது. ஒவ்வொரு நிகழ்ச்சியும் பாரம்பரியத்திற்கும் படைப்பாற்றலுக்கும் இடையிலான ஒரு உரையாடலாக இருக்கும். இது தலைமுறைகளை கடந்தும் எதிரொலிக்கும்.

 

இந்திய மரபுக் கலை வடிவங்களை முன்னிறுத்துவதன் மூலம், PROVOKE ART FESTIVAL – 2025 இந்திய மரபுக் கலை வடிவங்களை முன்னிறுத்துவதன் மூலம், தென்னிந்தியாவின் கலாசாரத் தலைநகராக சென்னை மீண்டும் உறுதி செய்யவுள்ளது. இந்த நிகழ்வில் மேலும் ஒரு சிறப்பம்சமாக கலை, இசை, நடனம் மற்றும் நாடகத் துறைகளில் சிறப்பாக செயல்பட்ட கலைஞர்கள் மற்றும் புகழ்பெற்ற விருந்தினர்களுக்கு மரியாதையும் செய்யப்படவுள்ளது.

 

இவ்விழாவிற்கு அனைவரும் வருகை தாருங்கள்.. நுழைவு கட்டணம் முற்றிலும் இலவசம்…

 

இடம் : தி மியூசிக் அகாடமி, ராயப்பேட்டை.

தேதி : நவம்பர் 1 & 2, 2025.

இலவச நுழைவு சீட்டுக்காக தொடர்பு கொள்ளவும்.. 9841433211 மற்றும் 98849 46548.