பிரபல முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்னாத், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா, சார்மி கௌர், JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா கூட்டணியில், பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள #PuriSethupathi படத்தின் முழு படப்பிடிப்பும் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துவிட்டது. அதிரடி மாஸ் எண்டர்டெயினராக உருவாகியுள்ள இந்தப் படம், தனது இறுதி நாள் படப்பிடிப்பை எட்டிய நிலையில், பூரி ஜெகன்னாத் – விஜய் சேதுபதி – சார்மி கௌர் ஆகியோர் பகிர்ந்த, மகிழ்ச்சியும், உணர்ச்சியும் நிறைந்த வீடியோவை வெளியிட்டு, இந்த சிறப்பு தருணத்தை படக்குழு கொண்டாடியுள்ளனர்.
வீடியோவில் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் உடனும் படக்குழுவுடனும் இணைந்து பணியாற்றிய அனுபவம் எந்த அளவு நினைவில் நிற்கக்கூடியது என்பதையும், அவர்களை நிறைய மிஸ் செய்யப் போவதாகவும் கூறினார். பூரி மற்றும் சார்மி ஆகியோரும் இதே போல தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொண்டனர். விஜய் சேதுபதி, நகைச்சுவையாக பூரியின் ஜாக்கெட்டை பாராட்டியதும் வீடியோவின் ஹைலைட்களில் ஒன்றாக இருந்தது.
இந்த படத்தை Puri Connects நிறுவனத்தின் சார்பில் பூரி ஜெகன்னாத் மற்றும் சார்மி கௌர் இணைந்து தயாரிக்க, JB Motion Pictures நிறுவனத்தின் JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா இணைந்து தயாரிக்கிறார். படத்தில் சம்யுக்தா நாயகியாக நடிக்க, தபு மற்றும் துனியா விஜய் குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
‘அர்ஜுன் ரெட்டி’, ‘அனிமல்’ போன்ற படங்களில் அதிரடியான இசையமைப்பால் கவனம் பெற்ற தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். பிரம்மாஜி மற்றும் VTV கணேஷ் நகைச்சுவை கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில், படக்குழு புரமோஷன் பணிகளை விரைவில் தொடங்கவுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், டைட்டில் அறிமுகம் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்தப் படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பான்-இந்தியா பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
*நடிகர்கள் :*
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு, விஜய்குமார்.
*தொழில்நுட்பக் குழு:*
எழுத்து, இயக்குநர் : பூரி ஜெகன்நாத்
தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத், சார்மி கௌர் , JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா
வழங்குபவர் : சார்மி கௌர்
தயாரிப்பு நிறுவனங்கள்: Puri Connects
இசை: ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்
CEO : விசு ரெட்டி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெடிங் : ஹேஷ்டேக் மீடியா