Sun NXT-ல் வெளியாகியுள்ள உன் பார்வையில் வழக்கமான க்ரைம் திரில்லர் போலத் தொடங்கினாலும், திரைக்கதையில் வேகம் கூட்டி சைக்கலாஜிகல் திரில்லராக அசத்துகிறது.
👁️🗨️ கதையின் மையம் அணுகுமுறை
கண் பார்வையற்ற தங்கை தற்கொலை செய்துகொள்ள நாயகி அந்த மர்ம மரணத்தின் பின்னணியை விசாரிக்கிறார்,“யார் கொலை செய்தார்?” என்பதைக் காட்டிலும்
👉 “நாம் பார்க்கிறதே உண்மையா?”
👉 “யாரை நம்புவது என மர்ம முடிச்சுகளால்
கதை விரிகிறது.
திரில்லர்களில் வழக்கமாக இருக்கும் வேகமான திருப்பங்கள் கொஞ்சம் குறைவாக இருந்தாலும், அடுத்தடுத்து திருப்பங்களுடன், உணர்வுப்பூர்வமாக கட்டிப்போடுகிறது படம்.
⸻
🎭 நடிப்பு – படத்தின் மிகப்பெரிய பலம்
Parvati Nair இந்தப் படத்தின் முதுகெலும்பு.
•கண் பார்வையற்ற பெண்ணின் அச்சம்
•உடல் மொழி
•குரல் ஏற்றத் தாழ்வுகள்
எல்லாமே மிகச்சரியாக கையாண்டு நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
Venkat Raman மற்றும் Mahendran இருவரும் கதைக்கு தேவையான மர்மத்தைக் கூட்டுகிறார்கள். குறிப்பாக மகேந்திரனின் பாத்திரம், grey shade-ல் பயணிப்பது படத்திற்கு ஒரு கூடுதல் அழுத்தத்தை தருகிறது.
⸻
🌄 காட்சி மொழி & சூழல்
மலை கிராமம் ஒரு பின்னணியாக மட்டும் இல்லாமல், கதையின் மனநிலையை பிரதிபலிக்கிறது.
ஆனால் இதை இன்னும் தீவிரமாக பயன்படுத்தியிருக்கலாம் என்ற குறை இருக்கிறது.
⸻
🎼 தொழில்நுட்ப அம்சங்கள்
•பின்னணி இசை & ஒளிப்பதிவு சராசரி
•சில இடங்களில் திரில் அதிகரிக்க வேண்டிய இடங்களில் அமைதி அதிகமாக உள்ளது
இதனால் கிளைமாக்ஸ் வரை செல்லும் பயணம் கொஞ்சம் மெதுவாக தோன்றுகிறது.
⸻
🔍 மொத்த மதிப்பீடு
“உன் பார்வையில்”
•வேகமான மாஸ் திரில்லர் அல்ல
•ஆனால் சைக்கலாஜிகல் திரில்லர்களை ரசிப்பவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.
Rating ⭐⭐⭐ / 5