மில்லியன் டாலர் பப்ளிகேஷன் – புதிய இலக்கியப் பயணத்தின் தொடக்கம் !!

13

திரைத்துறையில் புதிய திறமைகளை அறிமுகப்படுத்தும் முயற்சிகளில் சிறப்பிடம் பெற்றுள்ள “மில்லியன் டாலர்” நிறுவனம், இப்போது எழுத்துலகிலும் தனது தடத்தை பதிக்க முனைந்துள்ளது. “மில்லியன் டாலர் பப்ளிகேஷன்” என்ற புதிய பதிப்பகத்தின் தொடக்கம் இதன் முக்கியமான அடுத்த படியாக அமைந்துள்ளது.

இந்தப் பதிப்பகத்தின் நோக்கம், இளம் எழுத்தாளர்களின் படைப்புகளை உலகளாவிய வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதோடு, அவற்றை எதிர்காலக் காட்சி ஊடகங்களுக்கு ஏற்ற வலுவான கதைக்களங்களாக உருவாக்குவதாகும். இலக்கியத்தையும், திரைப்படத் துறையையும் இணைக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்குவது இந்த முயற்சியின் முக்கிய அம்சமாகும்.

நிறுவனர் யுவராஜ் கணேசன் தலைமையில், இந்தப் பதிப்பகத்தை முன்னெடுத்து செல்ல ஒரு திறமையான நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் புளியந்தோப்பு மோகன் துறைத் தலைவராகவும், ஷாஜன் கவிதா முதன்மைப் பொறுப்பாசிரியராகவும், ரேவதி தலைமை வடிவமைப்பாளராகவும் பொறுப்பேற்றுள்ளனர்.

இலக்கிய உலகில் புதிய மாற்றத்தை உருவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள இந்த முயற்சி, எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் புதிய அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. “மில்லியன் டாலர் பப்ளிகேஷன்” தனது பயணத்தை தொடங்கியுள்ள நிலையில், இது எதிர்காலத்தில் பல புதிய திறமைகளை உருவாக்கும் மேடையாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.