நட்டி நடிப்பில் கபடியை மையப்படுத்தி உருவாகும் ‘ரேகாஸ் கபடி குழு’ !!

3

Megnas Vera Maari Production மற்றும் Rekhas Production இணைந்து தயாரிக்க, PT மெர்சிண்டோ ஜயமக்மூர் இணைந்து வழங்க, இயக்குநர்கள் மேக்னா & JTJ இயக்கத்தில், நடிகர் நட்டி முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, கபடி விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் புதிய படமான ‘ரேகாஸ் கபடி குழு’ படம், இன்று 26.5.2026 பூஜையுடன் இனிதே துவங்கியது.

இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் ஊடக நண்பர்கள் பலர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடி விளையாட்டின் பெருமைகளை உணர்த்தும் படைப்பாகவும் அதன் ஊரக உணர்வையும், அதனுடன் கலந்த மனித உணர்ச்சிகளையும் திரையில் கொண்டு வர முயற்சியாக இப்படம் உருவாகவுள்ளது.

இப்படத்தில் நடிகர்கள் நட்டி, மேக்னா, TSR, முனார் ரமேஷ், பி எல் தேனப்பன், வினோத் சேகர், ரேஷ்மா, நந்தா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இன்று பூஜை நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் கபடி விளையாட்டின் சுவாரஸ்யத்தையும், உணர்ச்சி பூர்வமான கதையையும் இணைக்கும் விதமாக அமைந்ததுடன் ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இப்படத்தின் துவக்க விழாவில்

தயாரிப்பாளர் நடிகர் மூனார் ரமேஷ் கூறியதாவது..,
தயாரிப்பாளர் மேக்னா மேடம் நிறைய நல்ல படங்களை தயாரித்துள்ளார். அவர் தற்போது பெண்களை வைத்து கபடியை பற்றி அவர் இயக்கி இப்படத்தை எடுக்கிறார் நானும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரம் செய்கிறேன். படம் மிகச்சிறப்பாக இருக்கும் அனைவருக்கும் நன்றி.

நடிகர் TSR கூறியதாவது..,
‘ரேகாஸ் கபடி குழு’ திரைப்படம் மூலம் படக்குழுவினர் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது. இந்த படத்தின் பின்னணி சக்தியாக இருக்கும் மேக்னா ஃபிலிம் ஃபேக்ட்ரியின் பயணம் மிகச் சிறப்பானது. சினிமாவை ஒரு தொழிலாக மட்டும் அல்ல, உயிராக நேசித்தவர்களின் முயற்சியிலிருந்து இந்த நிறுவனம் உருவானது. சுமார் நாற்பது முதல் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே இந்த பயணம் தொடங்கியது. அந்த காலத்தில் சினிமா என்பது எளிதான பாதை இல்லை; பலர் சுற்றித்திரியும் கனவாகவே அதை பார்த்தார்கள். ஆனால் அந்த “சுற்றிக்கொண்டிருப்பவர்கள்” தான் இன்று பெரிய இடங்களை அடைந்துள்ளனர் என்பது சினிமாவின் உண்மை வரலாறு. அதேபோல், மேக்னா ஃபிலிம் ஃபேக்ட்ரியும் சினிமாவுக்காக முழுமையாக அர்ப்பணித்த ஒரு நிறுவனம். சினிமாவின் பல துறைகளை அடிப்படையிலிருந்து கற்றுக்கொண்டு, அதை வெளிக்கொணர வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்கள் பயணித்துள்ளனர்.

இந்த அடித்தளத்திலிருந்தே இன்று ‘ரேகாஸ் கபடி குழு’ போன்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் மேக்னா ஃபிலிம் ஃபேக்ட்ரியுடன் இணைந்து பாரம்பரிய டெக்ஸ்டைல் தொழிலில் இருக்கும் Rekhas Production மற்றும் PT மெர்சிண்டோ ஜயமக்மூர் குழுவினரும் பங்கெடுத்துள்ளனர். ஒரு சிறிய விதையாக தொடங்கிய இந்த முயற்சி, பெரிய வெற்றியாக மலரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

படக்குழுவை வாழ்த்திய இயக்குநர் பேரரசு கூறியதாவது..
இன்றைய திரையுலகம் ஒரு நல்ல மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இப்படம் போன்ற முயற்சிகள் ஒரு உதாரணம். முன்னாள் காலத்தில் பெரிய ஹீரோ, பெரிய பட்ஜெட் இருந்தால்தான் படம் ஓடும் என்ற நிலைமை இருந்தது. ஆனால் இப்போது சின்ன கதையாயிருந்தாலும், அது சரியான முறையில் சொல்லப்பட்டால் மக்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். கபடி விளையாட்டை மையமாகக் கொண்டு முன்னர் வெளியான ‘வெண்ணிலா கபடி குழு’ போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த படம் பல நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பெரிய வாய்ப்புகளை உருவாக்கியது. அதுபோலவே, இந்த ‘கபடி குழு’ திரைப்படமும் நல்ல கதையுடன், உணர்ச்சியுடன் வந்தால் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்த படத்தில் பணிபுரியும் இயக்குனர்கள் மேக்னா மற்றும் JTJ, நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் இந்த படம் ஒரு முக்கியமான படியாக அமையும். அவர்கள் அனைவரும் இந்த படத்தின் மூலம் நல்ல பெயர் மற்றும் அங்கீகாரம் பெற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. ‘ரேகாஸ் கபடி குழு’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று, ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்க வேண்டும் அதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இயக்குநர், தயாரிப்பாளர், நாயகி மேக்னா படம் பற்றி கூறியதாவது..,
முன்னதாக நாங்கள் டிவிகே என்ற படம் செய்தோம் அப்படம் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது. இந்தப்படம் நம் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடியை பற்றியும் அதில் பெண்களின் பங்கு என்ன என்பதையும் சொல்லும் வித்தியாசமான படைப்பாக இருக்கும். இப்படம் கண்டிப்பாக அனைவரையும் கவரும் படைப்பாக இருக்கும். என்றார்.

இப்படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தொழில் நுட்ப குழு
தயாரிப்பு – Megnas Vera Maari Production, Rekhas Production மற்றும் PT மெர்சிண்டோ ஜயமக்மூர்
இயக்கம் – மேக்னா & JTJ
கலை இயக்கம் – ராமலிங்கா M T.
ஒளிப்பதிவு – R N சிவகுமார்,
T. வினோத் ராஜா,
எடிட்டிங் – KBREDIX, சண்முகம்
உடை வடிவமைப்பு – நாகு,
தயாரிப்பு மேலாளர் – பாரதிராஜா,
மக்கள் தொடர்பு – ஹரிபாபு S, ராதாகிருஷ்ணன்,
இணை இயக்குநர் – அன்பழகன்.