U சான்றிதழ் பெற்ற “அங்கீகாரம்” ஜூன் 26-ல் ரிலீஸ்…!

5

ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதாநாயகனாக நடித்துள்ள “அங்கீகாரம்” திரைப்படம் ஜூன் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படம் தணிக்கைக் குழுவின் U சான்றிதழையும் பெற்றுள்ளது.

டிரெய்லர் மூலம் ஏற்கனவே கவனம் பெற்றிருந்த இப்படத்தின் முதல் சிங்கிள் “சட்ட சட்ட சான்றோரே” தற்போது வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஜிப்ரான் இசையில், கார்த்திக் நேதா வரிகளில் உருவான இந்தப் பாடலை வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ளார். சட்டத்தையும் சமூகத்தையும் கேள்வி கேட்கும் ஆழமான கருத்துகளுடன் அமைந்துள்ள இந்த மெலடி பாடல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, தடகள வீரர்கள் சந்திக்கும் போராட்டங்களையும் அங்கீகாரத்திற்கான அவர்களின் பயணத்தையும் பேசும் படமாக “அங்கீகாரம்” உருவாகியுள்ளது. தனக்கான நீதிக்காக நீதிமன்றம் வரை போராடும் ஒரு தடகள வீரனின் கதையை மையமாகக் கொண்டு படம் உருவாகியுள்ளது.

பா.ரஞ்சித்தின் முன்னாள் உதவி இயக்குநரான தென்பாதியான் இயக்கியுள்ள இப்படத்தில் விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, சிந்தூரி விஸ்வநாத், ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஏ.விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். பீட்டர் ஹெயின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ள நிலையில், தினேஷ்குமார் படத்தொகுப்பை கவனித்துள்ளார். ராமு தங்கராஜ் கலை இயக்கம், சம்பத் ஆழ்வார் ஒலி வடிவமைப்பு, ஷெரீப் நடன அமைப்பு ஆகியவை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன.

டிரெய்லர் மற்றும் முதல் சிங்கிள் பாடலுக்கு கிடைத்து வரும் வரவேற்பைத் தொடர்ந்து, ஜூன் 26-ம் தேதி வெளியாகும் “அங்கீகாரம்” படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.